top of page

June மாத நட்சத்திரமாகிறார் செல்வி வைஷாலி பகீரதன்.


2019 June மாத நட்சத்திரமாகிறார் செல்வி வைஷாலி பகீரதன்

மெய்வெளி நாடகப் பயிலகத்தின் மாதாந்த பயிற்சியாளர் அளிக்கையில் 2019 இன் June மாதத்திற்கான STAR OF THE MONTH பாராட்டு விருதினை செல்வி வைஷாலி பகீரதன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.



மெய்வெளி நாடகப் பயிலகத்தின் June மாதத்திற்கான பயிற்சியாளர் அளிக்கை கடந்த வாரம் வெள்ளிக்கிழமை(28 June 2019) Hayes இல் உள்ள Barnhill community high school இல் நடைபெற்றது. பெற்றோர்களும் பிள்ளைகளை உற்சாகமூட்ட வந்திருந்த விருந்தினர்களும் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் கலை இலக்கியவாதியும், விமர்சகரும், ஈழத்தின் மிகக் காத்திரமான பெண் ஆளுமைகளில் ஒருவருமாகிய திருமதி மாதவி சிவலீலன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டிருந்தார்.

இலக்கியவாதியும், விமர்சகரும், ஈழத்தின் மிகக் காத்திரமான பெண் ஆளுமைகளில் ஒருவருமாகிய திருமதி மாதவி சிவலீலன் அவர்கள் சிறப்பு விருந்தினராக உரையாற்றும் போது

தாம் கற்றுக்கொண்ட அரங்க நுட்பங்களையும் தமது உருவாக்கத்தில் தாமே தயார்ப்படுத்திக்கொண்ட விபரண அளிக்கைகளையும் பயிற்சியாளர்கள் இந்த நிகழ்வில் நிகழ்த்திக் காட்டியிருந்தார்கள்.

அரங்க விளையாட்டுக்கள்,உடல் மொழிப் பிரயோக நுட்பங்கள்,பயிற்சி நெறியால் தாம் பெற்றுக்கொண்ட நன்மைகள், தற்போது ஒத்திகைகளில் இருக்கும் இலக்கிய நாடகங்களில் இருந்து சில துணுக்குகள் போன்ற பல சுவாரஸ்யமான அளிக்கைகளோடு அன்றைய நாளை பயிற்சியாளர்கள் சிறப்பித்திருந்தார்கள்.

முப்பது பயிற்சியாளர்கள் பயிலும் இந்த நாடகப் பயிலகத்தில் 2019 June மாதத்திற்கான பயிற்சியாளர் நட்சத்திரமாக செல்வி வைஷாலி பகீரதன் தெரிவுசெய்யப்பட்டு பாராட்டு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.

செல்வி வைஷாலி "STAR OF THE MONTH" பாராட்டு விருதினை திருமதி மாதவி சிவலீலன் அவர்களிடம் பெற்றுக்கொண்டபோது

பயிற்சிகளின் போது பயிற்சியாளர்களின் ஈடுபாடு, செயற்திறன், ஆர்வம், தற்துணிவு, பேசும் திறன், பாடும் திறன், ஆடும் திறன், தலைமைத்துவம், கூட்டுச் செயலுணர்வு, நன் நடத்தை, பயிற்சிகளுக்கான கிரமமான வரவு போன்ற பல விடயங்கள் மதிப்பீட்டுக்கு உட்படுத்தி இந்த நட்சத்திர தெரிவு மாதாந்தம் இடம்பெறும் என்று மெய்வெளி நிர்வாகம் நிகழ்வில் தெரியப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

STAR OF THE MONTH விருது பெறும் செல்வி செல்வி வைஷாலி பகீரதனுக்கு மெய்வெளி நிர்வாகம் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து நிற்கின்றது.


MISS VAISHALI PAKEERATHAN - STAR OF THE MONTH - JUNE 2019

35 views0 comments
bottom of page