ஒக்டோபர் மாத நட்சத்திரமாகிறார் கதிரவன் செல்லத்துரை!
Updated: Oct 21, 2023
மெய்வெளி நாடகப் பயிலகத்தின் மாதாந்த பயிற்சியாளர் அளிக்கையில் 2022 இன் October மாதத்திற்கான STAR OF THE MONTH பாராட்டு விருதினை செல்வன் கதிரவன் செல்லத்துரை பெற்றுக்கொண்டார்.
மெய்வெளி நாடகப் பயிலகத்தின் Hayes பிரிவின் 2022 October மாதத்திற்கான பயிற்சியாளர் அளிக்கை கடந்த 28 October 2022 வெள்ளிக்கிழமை அன்று Hayes இன் Harlington Sports Centre இல் உள்ள Drama Studio இல் நடைபெற்றது.
கொவிட் கால இடை நிறுத்தத்தின் பின்னர் மீண்டும் இவ்வாண்டு September மாதம் ஆரம்பமாகிய நாடகப் பயிலகத்தில் 2022 October மாதத்திற்கான பயிற்சியாளர் நட்சத்திரமாக செல்வன் கதிரவன் தெரிவு செய்யப்பட்டு பாராட்டு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
பயிற்சிகளின் போது பயிற்சியாளர்களின் ஈடுபாடு, செயற்திறன், ஆர்வம், தற்துணிவு, பேசும் திறன், பாடும் திறன், ஆடும் திறன், தலைமைத்துவம், கூட்டுச் செயலுணர்வு, நன் நடத்தை, பயிற்சிகளுக்கான கிரமமான வரவு போன்ற பல விடயங்கள் மதிப்பீட்டுக்கு உட்படுத்தி இந்த நட்சத்திர தெரிவு மாதாந்தம் இடம்பெறும் என்று மெய்வெளி நிர்வாகம் நிகழ்வில் தெரியப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. STAR OF THE MONTH விருது பெறும் செல்வன் கதிரவன் செல்லத்துரைக்கு மெய்வெளி நிர்வாகம் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து நிற்கின்றது.
Commentaires