top of page

ஜனவரி மாத நட்சத்திரமாகிறார்கள் நிவேதா மற்றும் சிவன்யா

Updated: Feb 2, 2020


மெய்வெளி நாடகப் பயிலகத்தின் மாதாந்த பயிற்சியாளர் அளிக்கையில் 2020 இன் January மாதத்திற்கான STAR OF THE MONTH பாராட்டு விருதினை செல்வி நிவேதா பாலகுமார் மற்றும் சிவன்யா சிவயோகன் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.


மெய்வெளி நாடகப் பயிலகத்தின் 2020 January மாதத்திற்கான பயிற்சியாளர் அளிக்கை நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை(31 January 2020) Hayes இல் உள்ள Barnhill community high school இல் நடைபெற்றது. பெற்றோர்களும் பிள்ளைகளை உற்சாகமூட்ட வந்திருந்த விருந்தினர்களும்

கலந்துகொண்ட இந்த நிகழ்வில் பெருமதிப்புக்குரிய Dr.நித்தியானந்தன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டிருந்தார்.

நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்த Dr.நித்தியானந்தன் அவர்கள் மெய்வெளிப் பயிற்சியாளர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் தனது கற்றல் கற்பித்தல் அனுபவங்களில் இருந்து பல விடயங்களை மிகச் சுவாரஸ்யமாக தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.

“கற்றலுக்கு குறுக்குவழிகள் எப்போதும் இருந்தது கிடையாது.” என்று ஆரம்பித்து காலத்திற்கேற்ப பல சங்கதிகளை அங்கு மேற்கோள்காட்டியிருந்தார்.

தாம் கற்றுக்கொண்ட அரங்க நுட்பங்களையும் தமது உருவாக்கத்தில் தாமே தயார்ப்படுத்திக்கொண்ட விபரண அளிக்கைகளையும் பயிற்சியாளர்கள் இந்த நிகழ்வில் நிகழ்த்திக் காட்டியிருந்தார்கள். அத்துடன் கடந்த தமிழர் திருநாளையொட்டி லண்டனில் நடைபெற்ற "தமிழ் மரபுரிமைத் திங்கள்" நிகழ்வில் மெய்வெளி நாடகப் பயிலகம் தயாரித்து வழங்கிய "மரபுக் கலைக் கதம்பம்"என்ற நிகழ்வும் பயிற்சியாளர்களால் நிகழ்த்திக் காட்டப்பட்டிருந்தது.

தாளப் பயிற்சிகள், அரங்க விளையாட்டுக்கள்,உடல் மொழிப் பிரயோக நுட்பங்கள்,பயிற்சி நெறியால் தாம் பெற்றுக்கொண்ட நன்மைகள், போன்ற பல சுவாரஸ்யமான அளிக்கைகளோடு அன்றைய நாளை பயிற்சியாளர்கள் சிறப்பித்திருந்தார்கள்.

ஐம்பது பயிற்சியாளர்கள் பயிலும் இந்த நாடகப் பயிலகத்தில் 2020 January மாதத்திற்கான பயிற்சியாளர் நட்சத்திரங்களாக செல்வி நிவேதா பாலகுமார் மற்றும் சிவன்யா சிவயோகன் போன்றோர் தெரிவுசெய்யப்பட்டு பாராட்டு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

பயிற்சிகளின் போது பயிற்சியாளர்களின் ஈடுபாடு, செயற்திறன், ஆர்வம், தற்துணிவு, பேசும் திறன், பாடும் திறன், ஆடும் திறன், தலைமைத்துவம், கூட்டுச் செயலுணர்வு, நன் நடத்தை, பயிற்சிகளுக்கான கிரமமான வரவு போன்ற பல விடயங்கள் மதிப்பீட்டுக்கு உட்படுத்தி இந்த நட்சத்திர தெரிவு மாதாந்தம் இடம்பெறும் என்று மெய்வெளி நிர்வாகம் நிகழ்வில் தெரியப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

STAR OF THE MONTH விருது பெறும் செல்வி நிவேதா பாலகுமார் மற்றும் சிவன்யா சிவயோகன் இருவருக்கும் மெய்வெளி நிர்வாகம் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து நிற்கின்றது.



112 views0 comments
bottom of page