top of page

SOUTHEND-ON-SEA இல் அறிமுகப் பயிற்சிப் பட்டறை


SOUTHEND-ON-SEA இல் நேற்றைய தினம்(15.01.2019) நடைபெற்று முடிந்தது மெய்வெளியின் அறிமுகப் பயிற்சிப் பட்டறை.

எதிர்வரும் February 2020 இல் SOUTHEND-ON-SEA இல் ஆரம்பமாக இருக்கும் மெய்வெளியின் பிராந்திய நாடகப் பயிலகத்துக்கான அறிமுகப் பயிற்சிப்பட்டறை ஒன்று நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை(15.12.2019) அன்று SOUTHEND-ON-SEA இல் அமைந்துள்ள St.Peter‘S community hall இல் நடைபெற்றது.

மதியம் 1.00 மணி முதல் 3.00 மணிவரை நடைபெற்ற இந்த அறிமுகப் பட்டறையில் பிள்ளைகளுடன் இணைந்து பெற்றோர்களும் மிக உற்சாகமாகக் கலந்து கொண்டார்கள்.

மெய்வெளியின் Southend-on-Sea இணைப்பாளர்களான

திரு.கணேஷ் மற்றும் திரு.பொபி ஆகியோர் இந்த நிகழ்வை குறித்த பிராந்தியத்தில் ஒழுங்கு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Southend-on-Sea பிராந்திய தமிழ்க் குழந்தைகளின் நன்மை கருதி மெய்வெளியின் பயிலக அலகு ஒன்றை அந்த இடத்தில் ஆரம்பிக்க உழைத்த அதன் இணைப்பாளர்களுக்கு மெய்வெளி தனது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்ற

து.

177 views0 comments

Comments


bottom of page