top of page

February மாத நட்சத்திரமாகிறார்கள் அபிஷன் மற்றும் சயூறி

Updated: Nov 6, 2020


மெய்வெளி நாடகப் பயிலகத்தின் மாதாந்த பயிற்சியாளர் அளிக்கையில் 2020 இன் February மாதத்திற்கான STAR OF THE MONTH பாராட்டு விருதினை செல்வன் அபிஷன் வரதரஞ்சன் மற்றும் செல்வி சயூறி சிவகரன் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.

மெய்வெளி நாடகப் பயிலகத்தின் 2020 February மாதத்திற்கான பயிற்சியாளர் அளிக்கை கடந்த 28 February 2020 வெள்ளிக்கிழமை அன்று Hayes இல் உள்ள Barnhill community high school இல் நடைபெற்றது

ஐம்பது பயிற்சியாளர்கள் பயிலும் இந்த நாடகப் பயிலகத்தில் 2020 February மாதத்திற்கான பயிற்சியாளர் நட்சத்திரங்களாக செல்வன் அபிஷன் வரதரஞ்சன் மற்றும் செல்வி சயூறி சிவகரன் போன்றோர் தெரிவுசெய்யப்பட்டு பாராட்டு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

பயிற்சிகளின் போது பயிற்சியாளர்களின் ஈடுபாடு, செயற்திறன், ஆர்வம், தற்துணிவு, பேசும் திறன், பாடும் திறன், ஆடும் திறன், தலைமைத்துவம், கூட்டுச் செயலுணர்வு, நன் நடத்தை, பயிற்சிகளுக்கான கிரமமான வரவு போன்ற பல விடயங்கள் மதிப்பீட்டுக்கு உட்படுத்தி இந்த நட்சத்திர தெரிவு மாதாந்தம் இடம்பெறும் என்று மெய்வெளி நிர்வாகம் நிகழ்வில் தெரியப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

STAR OF THE MONTH விருது பெறும் செல்வன் அபிஷன் வரதரஞ்சன் மற்றும் செல்வி சயூறி சிவகரன் இருவருக்கும் மெய்வெளி நிர்வாகம் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து நிற்கின்றது.

44 views0 comments
bottom of page