Search
அரங்கில் மரணித்த கலைஞருக்கு மெய்வெளியின் அஞ்சலி!
பிரான்ஸ் திருமறைக்கலாமன்ற இணைப்பாளர் அமரர் டேமியன் சூரி அவர்களுக்கு மெய்வெளி நாடகப் பயிலக மாணவர்களும் பெற்றோர்களும் அஞ்சலி செலுத்தினர்.
கடந்த வெள்ளிக்கிழமை 25.10.2019 அன்று லண்டனில் நடைபெற்ற மெய்வெளி மாணவர்களுக்கான மாதாந்த அவைக்காற்றுகை நிகழ்விலேயே இவ் அஞ்சலி இடம்பெற்றது.
பிரான்ஸ் திருமறைக்கலாமன்றத்தின் ஆரம்பகால மூத்த உறுப்பினரும் தேர்ந்த கலைஞருமாகிய
பெருமதிப்புக்குரிய திரு.பெஞ்சமின் இம்மனுவேல் அவர்கள் நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக வருகைதந்தமையை மெய்வெளி தமக்கு கிடைத்த பெரும் பேறாகக் கருதுகின்றது.
Comments