கற்பிக்கும் முறையில் உள்ள யுக்திகளைக் கண்டு ஆச்சரியம் அடைந்தேன். - தேவராசா காண்டீபன் -
உண்மையில் இந்த 'மெய்வெளி' என்ற உண்மையான அரங்கத்தில் பயிலும் மாணவர்கள் மிகவும் பயனுறப் பிறந்தவர்கள். எனது மகனும் அவர்களில் ஒருவர் என்பதால் மட்டும் இந்தக் கருத்தைக் கூறவில்லை. ஹெயிஸில் முழு நாளும் ஒரு பெற்றோராகவும், பார்வையாளனாகவும் நின்று அனைத்து நிகழ்வுகளையும் கண்டு கண் குளிர்ந்தேன். சாம் அண்ணாவினதும், றஜித்தா அக்காவினதும் தமிழ் மீதான பற்றும், கலை மீதான பற்றும் தமிழ் உலகு அறிந்த விடயம். ஆனால், நேரடியாக அரங்கில் நின்று பார்த்த பொழுது அவர்களின் கற்பிக்கும் முறையில் உள்ள யுக்திகளைக் கண்டு ஆச்சரியம் அடைந்தேன்.
அவர்களின் திறமை இன்னும் எமது சிறார்களுக்குப் பயன்பட வாழ்த்துகிறேன்.
நாம் எமது அடுத்த தலைமுறைக்கு எதை விட்டுச் செல்லுகின்றோம் என்பது மட்டும் முக்கியமல்ல. எதை,எப்படி எடுத்துச் சொல்லி எமது சந்ததி தொலைத்த விழுமியங்களையும், கலைகளையும் எமது வருங்காலச் சந்ததியினர் காக்க வேண்டும் என்று பாடுபடுபவர் அரிதினும் அரிது. அத்தகைய மன நிலைக்குரியவர்கள் சாம் அண்ணாவும் றஜித்தா அக்காவும். அவர்கள் இருவரையும் மெய்வெளி நாடகப் பட்டறை மூலம் இன்று கண்டதில் மட்டற்ற மகிழ்ச்சி. மெய்வெளியின் சேவைகள் சிறப்பாகத் தொடர வாழ்த்துகள்.
ஒரு இரசிகனாக, தந்தையாக, தமிழ்ப் பற்றாளனாக,
- தேவராசா காண்டீபன் -
Comentarios