top of page
Writer's pictureDirector

"கடலளவு கனவு"

- நடா சிவா -


நேற்றைக்கு முன் தினம் 07/05/2023 வேலணை ஒன்றியம் பிரித்தானியா தனது பத்தாவது ஆண்டுவிழா நிகழ்வில் "கடலளவு கனவு" என்ற நாடகம் அரங்கேறியிருந்தது. எம்கலைஞன் சாம் பிரதீபன் அவர்களின் நெறிப்படுத்தலில் சிறுவர்கள் பெரியவர்கள் என பதினொரு கலைஞர்கள் நடித்திருந்தார்கள். மெய்வெளி கலையகத்தால் இந்நாடகம் நேற்று முதலரங்கம் கண்டது.


அனைவரும் தங்களுடைய தனித்துவமான நடிப்புகளால் பார்வையாளர்களின் பாராட்டுதல்களைப் பெற்றார்கள். அதிலும் குறிப்பாக வெண்பாவாக நடித்த சிறுமியின் உன்னதமான நடிப்பும் அழகான தமிழ் உச்சரிப்பும் மிகவும் பாராட்ட படவேண்டும். அவரை இந்தளவுக்கு வடிவமைத்த திரு திருமதி சாம் ரஜிதா தம்பதிகளுக்கு பாராட்டுகள். நாடகம் நடக்கும் வேளை அரங்கம் முழுவதும் நிசப்தமாக அனைவரின் கவனமும் நாடகத்திலே பதிவாகியதை கவனிக்க முடிந்தது. மொத்தத்தில் புலம்பெயர்ந்து வாழும் நமது தமிழ்பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமான வாழ்வியல் விழிப்புணர்வை இந்நாடகத்தின் மூலம் வெளிக்கொண்டு வந்துள்ளார் நெறியாளர். கிடைத்த நேரத்தில் ஒரு நல்ல நாடகமேடையை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி. பங்குபற்றியவர்களுக்கும் நெறிப்படுத்தி வழிப்படுத்திய சாம் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள். இப்படிப்பட்ட நல்ல சமூகசீர்திருத்த அரங்க நிகழ்வுகளை மெய்வெளி கலையகத்தின்வழி எதிர்பார்க்கின்றோம்.


50 views0 comments

Comments


bottom of page